உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, உரிய ஸ்கேன் இயந்திரங்கள் இல்லாததால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என எம்எல்ஏ அய்யப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், மாவட்ட தலைமை மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையாலும், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்கேன் எடுக்க உரிய வசதிகள் இல்லை எனவும், தனியார் ஸ்கேன் செண்டர்களுக்கு சென்று பொதுமக்கள் அவதியுறும் நிலை நீடிப்பதாகவும்., கடந்த இரு வாரங்களில் உரிய வசதிகள் இல்லாததால் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும்,
விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் வசதி இல்லாததால் அடிக்கடி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், மதுரை செல்லும் வழியிலேயே ஒரு சிலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், விபத்தில் சிக்கும் நபர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களை பாதுகாக்க உரிய ஸ்கேன் இயந்திரங்களை பொறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என குற்றம் சாட்டினார்.,
மேலும் உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு கடந்த ஆண்டும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கவில்லை என்றும், இந்த ஆண்டு வைகை அணை நிரம்பியுள்ள சூழலில் விரைவில் 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும்.,
அரசு கள்ளர் விடுதிகளை சமூக நிதி விடுதிகளாக மாற்றம் செய்வதற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக பேட்டியளித்தார்.,