செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தில் ஆடி வெள்ளியை ஒட்டி மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி அன்னதானம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை ஒட்டி மழை வேண்டி அன்னதானம் நடைபெற்றது. அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலில் அறுசுவை அன்னதானம் காலை 8 மணி முதல் தொடர்ந்து மதியம் வரை நடைபெற்றது இதில் பன்னியான், சிவநாதபுரம், சொக்கநாதபுரம், செக்கானூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானம் உண்டு மகிழ்ந்தனர் செக்கானூரணி காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பன்னியான் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.