மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் வழிபாடு செய்து சிறப்புரையாற்றினார். பெருமாளுக்கு சிறப்பு ஸ்தோத்திர பாடல்கள் பாடி அர்ச்சனைகள் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டது தொடர்ந்து. முரளிதர சுவாமிகள் சிறப்புரை ஆற்றும் போது இறைவனை அடைய அவரது நாமங்களை கேட்பது சிறந்த வழி என்றும் தொடர்ந்து கிருஷ்ணர் கதையை கேட்க நமது பிறவி பெருங்கடல் தீரும் என்று கூறினார் இதில் தென்கரை சுற்று வட்டார பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி செய்திருந்தார்
