மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் மீட்டெடுப்போம் எனும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.,
இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட மதுரை – சிந்தாமணி பகுதி தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் 5 ஆயிரம் வாக்குகள் இருக்காதா என திருச்சி சிவா பேசுகிறார், கேட்கிறார்., இவர்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்த வேண்டும் எனவும்.,
திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது., திமுக ஆட்சியில் பங்கு தர வேண்டும், ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி என்பதை கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்கள்.,
இல்லையெனில் விஜய் கூட்டணியை நோக்கி காங்கிரஸ் என்ற கிளி பறந்துவிடும் என காங்கிரஸ் நிர்வாகியே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.,