மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் , பகவதி அம்மன் விநாயகர், நாகம்மாள் கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன்களுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து வளையல் அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது தொடர்ந்து கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியாக இருந்தது .
இதில் நாச்சிகுளம் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை நாச்சிகுளம் கிராமத்தினர் மற்றும் இளைஞர் எழுச்சி மன்றத்தினர் செய்திருந்தனர்.
