மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45) சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார்.இவரது மனைவி ரெங்காதேவி (39) இவர்களுக்கு சந்தியா தேவி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று மார்நாடு பெருமாள் பட்டி மந்தையில் கழிவுநீர் சாக்கடை பணிக்காக எம் சாண்ட் மண்ணை லாரியில் கொண்டு வந்தார். பின் அதை கொட்டிய போது லாரி டயரில் மண் இருந்ததால் அதை ரெங்காதேவி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் ரெங்காதேவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மார்நாடு மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது வழியிலேயே ரெங்கா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவன் ஓட்டிய லாரி மோதி மனைவி இறந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment.