மதுரை மாவட்டம்
சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன அவற்றில் பல பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி ஓட்டை உடைசலாக உள்ளது
சில பேருந்துகளில் கரும்புகை கக்கிகொண்டு செல்லும் அவலம் உள்ளது. சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் அதிகளவிலான கரும் புகைகளை வெளியிட்டு செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிக அளவு கரும்புவை வெளியிடுவதால் காற்று மாசு படுவதுடன் மோசமான சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டு வருகிறது. கரும்புகையால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு இன்றி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்கம் வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பயணிகள் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர் அதற்கு அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
