சோழவந்தானில் படிக்கட்டு இல்லாத பேருந்துகளால் ஆபத்தான நிலையில் பயணிக்கும் பயணிகள்.மனிதாபிமானத்துடன் பயணிகளுக்கு உதவிய நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் முறையான பராமரிப்பு செய்யாததால் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் சோழவந்திலிருந்து வாடிப்பட்டி சென்ற பேருந்தில் கீழ் படிக்கட்டு இல்லாததால் பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகள் தடுமாறி கீழே விழக்கூடிய நிலை ஏற்பட்டது குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் கீழ்படிக்கட்டு இல்லாததால் கீழே இறங்குவதில் கடும் சிரமப்பட்டனர் இதனை அறிந்த நடத்துனர் படிக்கட்டின் கீழே நின்று அனைவரும் இறங்குவதற்கு உதவி செய்தார் நடத்துனரின் இந்த மனிதாபிமான செயலை பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி சென்றனர் போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உள்ள அக்கறை அதிகாரிகளுக்கு இல்லையே என பொதுமக்கள் பேசிச் சென்றனர் உடனடியாக இதுபோன்ற பராமரிப்பு இல்லாத பேருந்துகளை நிறுத்திவிட்டு இந்த வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!