மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவிற்கு 100 கிராம கோவில்களில் 100 நாட்கள் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வரும் நிகழ்ச்சியில் செம்மினி பட்டி முத்தாலம்மன் கோவிலில்
முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர் பி உதயகுமார் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி இளைஞர் இளம்பெண் பாசறையினருக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு. காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பையா, மாணிக்கம், பேரவை மாநில நிர்வாகி வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா, மகளிர் அணி லட்சுமி விவசாயப்பிரிவு வாவிடமருதூர் ஆர்.பி. குமார் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் புதுப்பட்டி பாண்டுரங்கன்முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மு கா. மணிமாறன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது:-புரட்சித் தமிழர் எடப்பாடியார் முதல் கட்ட எழுச்சி பயணத்தைநேற்றோடு நிறைவு செய்து ஆடி அமாவாசை நாளான இன்று இரண்டாவது கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த இரண்டாவது கட்டம் புதுக்கோட்டையில் தொடங்கி சிவகங்கை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி விருதுநகர் என்று தொடர இருக்கிறார். இதில் முதல் கட்ட பயணத்தில் எடப்பாடி யாருக்கு வரும் கூட்டத்தை பார்த்து
எதிர்க்கட்சியினர்ஆளுங்கட்சியான ஸ்டாலின் கூடாரம் ஆட்டம் கண்டுள்ளது. தற்போதைய முதலமைச்சர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் அடைய வேண்டும் என்று வருங்கால முதலமைச்சர் எடப்பாடி யார் பேரறிஞர் அண்ணாவின் கூற்றின்படி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற அடிப்படையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பூரண நலம் அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். என்று முன் வைத்த அந்தப் பிரார்த்தனை யின்படி உங்களின் சார்பிலே நானும் அதை முன்வைத்து செம்மினி பட்டியில் பிரார்த்தனை செய்கிறேன். முதல் கட்டத்திலேயே உங்களுக்கு நெஞ்சு வலி வந்துள்ளது. அடுத்தடுத்த கட்டத்தில் நடுநடுங்கி போகும் அளவுக்கு மக்கள் வரவேற்கும் கண்கொள்ளாத காட்சி இருக்கும். விவசாயிகளின குறைகளை இன்றைய அரசு காது கொடுத்து கேட்க மறுக்கிறது என்று கூறி வருகிறார்கள் அதனால் விவசாயம் முதலமைச்சர் எடப்பாடி யார் வரவேண்டும் என்று ஆவலோடு காத்திருக்கிறோம் தவம் இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.4 வருடத்தில் செய்யாத உதவியை நான்கு மாதங்கள் இருக்கின்ற நிலையில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
ஆட்சியை விட்டு வீட்டுக்கு போகின்ற நிலையில் அம்மா வாங்க ஐயா வாங்க ஆயிரம் ரூபாய் தரோம் என்று கூறி உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாமில் நடத்தி வருகிறார்கள்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் மனு பெற்றார்கள் ஆட்சிக்கு வந்த பின் மனு பெற்றார்கள். ஆட்சியை விட்டு போகும் போதும் மனுக்கள் பெறுகிறார்கள். இதை எங்கே கொண்டு போய் போடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. திமுக ஆட்சியில் வழங்கப்படும் உரிமைத் தொகை அதிமுக எடப்பாடியார் ஆட்சியில் இன்னும் கூடுதலாக உங்கள் வீட்டுக்கே வந்து உரிமை தொகை வழங்கப்படும். என்று பேசி மக்களை காப்போம் தமிழகத்தை காப்போம் மீட்போம் மீட்போம் தமிழகத்தை மீட்போம் என்று கூறி கோஷம் எழுப்பினார்.இந்த நிகழ்ச்சியில் இதில் கட்சி நிர்வாகிகள் கோட்டைமேடு பாலன், நாகமலை, மூர்த்தி, பிரபு, முருகன், ராமசந்திரன், தென்கரை நாகமணி தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வதர்மர் நன்றி கூறினார்.
