மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புறம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில் மறியல் செய்ய முயன்றனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடுபட்டி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மன்னாடிமங்கலம் ஊராட்சி நிர்வாகம் வருவாய் துறையினர் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதில் விவசாய சங்க நிர்வாகிகள் கருப்புசாமி விவேக் கந்தவேல் சின்னச்சாமி பிரபு செல்வகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.