மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜீலை மாதம் வரை நாட்டாமங்கலம் கிராமத்தை காலி இடமாக காட்டாமல் கூடுதல் பொறுப்பிலேயே ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்ந்தி வைத்திருந்ததாகவும். பின்; கஸ்தூரி என்பவரை நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக உசிலம்பட்டிவருவாய் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் பணி அமர்த்தியுள்ளார்.இந்நிலையில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு வந்த ரஞ்சனி, தனது இடத்தில் வேறு ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்த்தியதை அறிந்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் சென்று கோட்டாச்சியர் சண்முக வடிவேல் இடம் மகப்பேறு விடுப்பில் சென்ற அரசு ஊழியரின் பணி இடத்தை அவர் திரும்பி வரும் வரை பொறுப்பு அதிகாரிகளை வைத்தே அரசு பணிகளை செய்ய வேண்டும் எனவும், நேரடியாக வேறு ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்த்தியது முறைகேடானது என கேள்வி எழுப்பிய நிலையில் கோட்டாச்சியர் விரைவில் பிரச்சினை சரிசெய்யப்படும் என கூறிய நிலையில் இதுவரை சரிசெய்யாததால் நேற்று மாலை முதல் கோட்டாச்சியரைக் கண்டித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தலைவர் சுரேஷ் தலைமையில் அலுவலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.