ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர் இந்த நிலையில் காவல்துறையினர் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில் போக்குவரத்தையும் சீர் செய்ய முடியாத நிலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது குறிப்பாக திருவேடகத்திலிருந்து மேலக்கால் வைகை புதுக்காலம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆட்டோக்கள் கார்கள் இருசக்கர வாகனங்கள் என வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது போதுமான காவலர்கள் இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது பொதுவாக விழா காலங்களில் முன்கூட்டியே குறிப்பிட்ட அளவு காவலர்களை அனுப்பி போக்குவரத்தை சரி செய்யும் காவல்துறையினர் ஏனோ இந்த முறை கவன குறைவாக இருந்ததன் விளைவாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகின்றனர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கி பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் இனிவரும் காலங்களிலாவது இது போன்ற பிரச்சனைகள் நடக்காதவாறு காவல்துறையினர் முன்கூட்டியே முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்
