மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கல்குவாரியில் பொக்லைன் இயந்திரம் ஆப்பரேட்டராக பணியாற்றிய யோகேஷ்வரன் (22) என்பதும்அதே கல்குவாரியில் பணியாற்றிய ராஜேஸ் (35) என்பவரின் மனைவியுடன் இறந்த யோகேஷ்வரன் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழகி தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும்,மனைவி, யோகேஷ் இருவரையும் பலமுறை கண்டித்தும் தகாத உறவை கைவிட மறுத்ததால்யோகேஷ்வரனுக்கும் ராஜேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் ஆத்திரம் தீராத ராஜேஸ்குமார் யோகேஷ்வரன் பணியாற்றும் கல்குவாரிக்கு இன்று அதிகாலை சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார் மோதல் முற்றியதால் யோகேஷ்வரனை கட்டையால் சராமரியாக தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.தகாத உறவை கைவிட மறுத்த கள்ள காதலனை நண்பனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
