வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு Posted on July 23, 2025July 23, 2025 by mohanமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது.,கடந்த ஜூலை 1 ஆம் தேதி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வின் போது கூட நாட்டாமங்கலம் கிராமத்தை காலி இடமாக காட்டாமல் கூடுதல் பொறுப்பிலேயே ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்ந்தி வைத்திருந்ததாகவும்., கலந்தாய்வு முடிந்து 5 ஆம் தேதி வெளியான உத்தரவில் வகுரணி கிராமத்தை தேர்வு செய்த கஸ்தூரி என்பவரை நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக வருவாய் கோட்டாச்சியர் பணி அமர்த்தியுள்ளார்.,இந்நிலையில் மகப்பேறு விடுப்பு ஓர் ஆண்டுகளாக உள்ள நிலையில் ஏழே மாதத்தில் பணிக்கு வந்த ரஞ்சனி, தனது இடத்தில் வேறு ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்த்தியதை அறிந்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் இடம் மகப்பேறு விடுப்பில் சென்ற அரசு ஊழியரின் பணி இடத்தை அவர் திரும்பி வரும் வரை பொறுப்பு அதிகாரிகளை வைத்தே அரசு பணிகளை செய்ய வேண்டும் எனவும், நேரடியாக வேறு ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்த்தியது முறைகேடானது என கேள்வி எழுப்பிய நிலையில் கோட்டாச்சியர் விரைவில் பிரச்சினை சரிசெய்யப்படும் என கூறிய நிலையில் இதுவரை சரிசெய்யாததால் கோட்டாச்சியரைக் கண்டித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,தற்போது வருவாய் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் அலுவலகத்தில் இல்லாத நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்., Very Soon…உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..Click to share on Facebook (Opens in new window)Click to share on X (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to print (Opens in new window)Like this:Like Loading...Related