சோழவந்தான் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பேருந்துகளில் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் போக்குவரத்து கழகத்திற்கும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்கும்
கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான் பகுதியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இவர்கள் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து தினசரி பேருந்துகளில் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்குவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளின் படிகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே பேருந்தில் அடைத்துக் கொண்டும் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதுகுறித்து பலமுறைபோக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றும் இதுவரை கூடுதல் பேருந்துகளை இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குறிப்பாக திருவேடகம் விவேகானந்தர மேல்நிலைப்பள்ளி முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் கூடுதல் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முள்ளிப்பள்ளம் சோழவந்தான் திருவேடகம் நாச்சிகுளம் பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் அதேபோன்று சோழவந்தானிலிருந்து கருப்பட்டி இரும்பாடி மன்னாடி மங்கலம் குருவித்துறை ஆகிய பகுதிகளுக்கும் காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போக்குவரத்து கழகத்திற்கும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன
