விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் இந்த பகுதியில் குடிநீருக்காக பைப் லைன் கொண்டு செல்லும் பணிகளுக்காக சாலையில் தோண்டிய பள்ளங்களை சரிவர மூடாததால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாக செல்கிறது பைப் வேலைகள் முடிந்த பின்பு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சரிவர மூடாமல் சென்று விட்டதால் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் சாலையில் தேங்கி சேரும் சகதியுமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் இதன் காரணமாக இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர் ஆகையால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
