மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி மாவட்ட செயலாளர் முனியப்பன் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் நிர்வாகிகள் நகர்மன்ற துணைதலைவி தேன்மொழி மற்றும் நகராட்சி ஆணையாளர் இளவரசன் இடம் கவண்டனபட்டி; ஊரணியில் சேரும் கழிவு நீர் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றி ஊரணியை சுத்தப்படுத்த கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர். இம் மனுவில் நகராட்சி பகுதியில் 12 வார்டுகளுக்கு மேல்; சாக்கடை கழிவு நீர் கலந்து கவண்டன்பட்டியில் உள்ள் ஊரணியில் கலந்து தேங்குகின்றன ஊரணி வெளியேறும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் உபரி நீர் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சில்லோடையை மீட்டெடுக்க வேண்டும். தனியாக மூடிட்ட கழிவுநீர் பாதையில் கழிவு நீரை கவண்டம்பட்டி நகர் விரிவாக்க மையத்திற்கு அப்பால் கொண்டு சென்று சுத்திகரித்து அனுப்புதல் வேண்டும். மேலும் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.இதில் நாம் தமிழர் கட்சி செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மார்க்கண்டன் மாநில நிர்வாகி ராஜா வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் நகர பொறுப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You must be logged in to post a comment.