விக்கிரமங்கலத்தை அடுத்த கீழ பெருமாள் பட்டியில் கணவன் மனைவி தீக்குளிப்பு..உறவினர் வீட்டை அபகரித்தது தொடர்பாக கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த கீழப்பெருமாள் பட்டியில் வசித்து வருபவர் மாயி இவரது மனைவி இருளாயி இவர்களுக்கு குழந்தை இல்லை இந்நிலையில் தங்களது சுய சம்பாத்தியத்தின் மூலம் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் கீழ பெருமாள் பட்டியில் வீடு ஒன்றை கட்டியுள்ளனர். அதனை அவர்களின் உறவினர் ஒருவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக அபகரித்துள்ளார் இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்திலும், செக்கானூரணி காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை இதனால் மணமுடைந்த கணவன் மனைவி இருவரும் இன்று தீக்குளித்தனர் பலத்த காயங்களுடன் இருந்து அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர் ஆனால் மருத்துவமனைக்கு செல்லாமல் கீழப்பெருமாபட்டியில் உள்ள நாடக மேடையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்
You must be logged in to post a comment.