உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய சம்பவம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.,
இந்த பகுதி மக்களுக்கு தினசரி நகராட்சி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்து வரும் சூழலில், வழக்கம் போல இன்று காலை திறக்கப்பட கவணம் பட்டி ரோட்டில் உள்ள தனியார் மண்டபம் அருகே குடிநீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் தெரு வழியாகவும், சாக்கடை கால்வாயிலும் ஆறாக ஓடியது.,
தெருக்களில் குடிநீர் ஆறாக ஓடியதால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் அவதியுற்றனர்.,
தகவலறிந்து விரைந்து வந்த நகராட்சி பணியாளர்கள் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி வைத்து, உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.,
இதே போன்று உசிலம்பட்டியின் பல்வேறு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வரும் சூழலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.,
நகராட்சி பணியாளர்கள் தண்ணீர் திறந்து விடும் முன் தினசரி ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து குடிநீர் குழாய்களில் ஏதேனும் பழுது உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். இப்பொழுது இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் .அவ்வாறு பரிசோதிக்காமல் வெறுமெனே கடமைக்காக பணி செய்யும் பொழுது குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்புகளை உடனடியாக சரி செய்தால் மட்டுமே பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என கோரிக்கை எழுந்துள்ளது.,
You must be logged in to post a comment.