மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி ஏழாவது வார்டு ஜவஹர்லால் நேரு தெருவில் 40 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பாதையை திடீரென வழி மறித்த காவல்துறை அதிகாரியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாடிப்பட்டி பேரூராட்சி ஏழாவது வார்டு ஜவஹர்லால் தெரு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை காவல்துறையை சேர்ந்த ஒருவர் தனது இடம் என்று கூறி கம்பி வேலி அமைக்க முற்பட்டார் அதனை தடுத்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் மற்றும தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்த கோரி அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். இதனால் வாடிப்பட்டி பேரூராட்சியில் பகுதியில் பெரும் பரபரப்பு. ஏற்பட்டு வருகிறது தொடர்ந்து காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது தொடர்ந்து மதுரை திண்டுக்கல் சாலையில் வாடிப்பட்டி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டன இந்த நாள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சாலை மறியல் செய்தவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடு சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் சாலை மறியல் செய்தவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இதனை அடுத்து சாலை மறியல் கைவிட்டு களைந்து சென்றனர்
You must be logged in to post a comment.