உசிலம்பட்டி அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு – 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.,
இதன் ஒரு பகுதியாக இன்று உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என தொட்டப்பநாயக்கணூர் முத்தாலம்மன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.,
தொடர்ந்து கிராம பொதுமக்கள் 2000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், முன்னாள் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நாராயணசாமி, உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வழங்கினர்.,
You must be logged in to post a comment.