மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜெயா தேவி சின்னமருது இவர் தனது மாமனாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் போலியாக பட்டா மாறுதல் செய்து காவல்துறை உதவியுடன் தனது உறவினர்கள் பெயர் மாற்றம் செய்திருப்பதாகவும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தாங்கள் குடியிருந்து வரும் இடத்தை ஒரு வாரத்திற்குள் காலி செய்யச் சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாகவும் மாவட்ட எஸ்பி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் மனு அளித்துள்ளார்
மனுவில் ஜெயா தேவி கூறியிருப்பதாவது நான் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் காடுபட்டி ஊராட்சியில் நானும் எனது கணவர் சின்னமருது மற்றும் எனது குடும்பத்தினர் வசித்து வருகிறோம் எனது மகன் அரசு பணிக்கு தயாராகி வருவதுடன் அதற்கான தேர்வுகளை எழுதி அரசு பணிக்காக காத்திருக்கிறார் இந்த நிலையில் எனது கணவருடன் பிறந்த மற்ற மூன்று பேரில் எனது கணவரின் அக்காவிற்கு நகைகள் மற்றும் ரொக்க பணத்தை செய்முறையாக எனது மாமனார் வழங்கி விட்டார்
எனது கணவர் பெயரில் உள்ள இடத்தை போலியாக பட்டா தயார் செய்து எனது கணவரின் அண்ணன் பெரிய மருது என்பவர் செக்கானூரணியில் உள்ள காவல் துறையில் பணிபுரிபவரின் மனைவிக்கு விற்பதற்கு முயற்சி செய்து வந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நானும் எனது கணவரும் நீதிமன்றம் மூலம் இடத்தை விற்பதற்கு தடை உத்தரவு பெற்ற நிலையில் நீதிமன்ற உத்தரவை பெற்று வந்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட போலீசாருடன் நாங்கள் குடியிருக்கும் காடுபட்டி இடத்திற்கு வந்து எங்களை ஒரு வாரத்திற்குள் வெளியேறச் சொல்லி மிரட்டி வருகிறார் மேலும் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்த பின்பும் வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் நில அளவை ஆகியோர் நிலத்தை அளப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்
இது குறித்து காடுபட்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறோம் அதற்கு அதன் பின்பும் காடுபட்டி காவல்துறையினர் மற்றும் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சமயநல்லூர் டிஎஸ்பி ஆகியோர்
ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்ய வேண்டும் என எங்களை மிரட்டுகின்றனர் எனது கணவரின் அண்ணனுக்கு உறவினரான செக்கானூரணியில் வசிக்கும் காவல்துறையை சேர்ந்தவர் அவரது மனைவியின் பெயரில் காடுபட்டியில் உள்ள எங்களது பூர்வீக இடத்தை முறைகேடாக பட்டா மாறுதல் செய்து விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் தெரிகிறது
ஆகையால் முறைகேடாக பட்டா மாறுதல் செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் மேலும் காவல்துறை மூலம் எங்களுக்கு தரும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான எனக்கும் எனது குடும்பத்திற்கும் முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து மேலும் அண்ணன் தம்பி மற்றும் நில பிரச்சனையில் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்து தலையிடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது ஆகையால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு மீது உரிய விசாரணை செய்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான எனக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைவருக்கும் மனு அளித்துள்ளேன் விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்
You must be logged in to post a comment.