சோழவந்தான் அருகேஇடிந்து விழும் நிலையில் உள்ள நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்

மதுரை சோழவந்தான் அருகே ஆபத்தான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள நாடக மேடையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கும் அவலம் ஆறு மாதங்களுக்கும் மேலாக கண்டுகொள்ளாத கல்வித் துறை அதிகாரிகள்உயிர்ப்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த நிலையில் பள்ளியின் கட்டிடங்கள் பழைய கட்டிடமாக இருந்ததால் இந்தப் பள்ளியை இடித்துவிட்டு புதிதாக பள்ளியை கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு பள்ளியை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்ற அதிகாரிகள் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை என தெரிகிறது

இதன் காரணமாக பழைய கட்டிடத்தில் கல்வி பயின்று வந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகில் மிக ஆபத்தான நிலையில் இருந்த நாடக மேடையில் அதாவது நாடக மேடையில் மேற்புற மதில் சுவர்கள் பெயர்ந்தும் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்தும் நாடக மேடை முன்பு கனரக வாகனங்களை நிறுத்தியும் ஆபத்தான நிலையில் கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது

இது குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெற்றோர்கள் தரப்பில் அதிகாரிகளிடம் மீண்டும் மனு அளித்து இருந்ததாக தெரிகிறது

இருந்தும் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நாடக மேடையில் கல்வி கற்கும் குழந்தைகளின் உயிர் பலி ஏற்படும் முன்பு புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் அல்லது அதுவரை வேறொரு பாதுகாப்பான கட்டடத்திற்கு மாற்றி குழந்தைகளை கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முக்கியமாக குழந்தைகளின் உயிருடன் விளையாடும் கல்வித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டுமொத்தமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் கடந்த ஜூன் மாதம் பள்ளி தொடங்கிய நாள் முதல் ஆபத்தான நிலையில் குழந்தைகள் கல்வி கற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர் ஆகையால் உடனடியாக அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

குறிப்பு தற்போது நாடக மேடையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கும் நிலையில் அவ்வப்போது நாடக மேடையில் மேல் மதிற் சுவர் பெயர்ந்து சிறு துகள்களாக கீழே விழுவதாக மாணவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!