மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆணி பெருந் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் சாற்றுதளுடன் தொடங்கியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரப்பினர் சார்பாக மண்டகப்படிகள் மற்றும் அன்னதானம் நிலைமாலை செலுத்துதல் சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் தொடர்ந்து கோவில் முன்பு முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மி பாட்டு பாடினர் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர் இதில் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் இளங்காளியம்மன் கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்

You must be logged in to post a comment.