100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி பெற்றுக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர் பி உதயகுமார் பேச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, , கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்., இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி உசிலை நகர செயலாளர் பூமா ராஜா துரை தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆர்பி உதயகுமார் பேசுகையில் பெண்களிடமும் இளைஞரிடமும் அதிமுக முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் அன்னதான நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு உள்ள வரவேற்பை பார்த்து திமுக அரசு உசிலம்பட்டி பகுதியில் கிராம பெண்கள் 100 நாள் வேலை செய்து வரும் நேரத்தை

காலதாமதப்படுத்துவதாக தெரிகின்றது . அதையும் மீறி பெண்கள் எழுச்சியுடன் அதிமுக விழாவில் பங்கேற்று வருகின்றனர் .100 நாள் வேலை திட்டத்திற்கு அதிக நிதி பிரதமரிடம் பெற்று கொடுத்தவர் நமது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை மக்கள் உணர்ந்து கொண்டு 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக வேண்டும் என கூறினார்
You must be logged in to post a comment.