46 கோடி மதிப்பீட்டில் துவரிமான் – கீழமாத்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் புதிய மேம்பால கட்டுமான பணிகளை சு. வெங்கடேசன் எம்பி துவக்கி வைத்தார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் முயற்சியில் ரூ.46 கோடியில் மதுரை துவரிமான் – கீழ மாத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துவரிமான் – கீழ மாத்தூர்
நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
நடைபெற்றது. இந்த புதிய மேம்பால கட்டுமான பணிகளை
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார்.

  1. சு. வெங்கடேசன் எம். பி. பேசியதாவது,

மதுரை மாவட்டம் துவரிமான் – கீழமாத்தூர் மற்றும் இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான துவரிமான்- கீழமாத்தூர் மேம்பால பணிகளை துவக்கி வைக்க தற்போது வந்துள்ளோம். தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கன்னியாகுமரியில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பாலம் இந்த துவரிமான்- கீழமாத்தூர் சந்திப்பு என்பது மிக அதிகமாக விபத்துகள் நடக்கக்கூடிய ஒரு சந்திப்பு.

பல உயிர்கள் இந்த இடத்தில் பலியாகி இருக்கின்றது. எண்ணற்ற மக்கள் இந்த சந்திப்பில் விபத்தில் சிக்கி கடுமையான சேதம் அடைந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு அதிகமாக விபத்து நடக்கிற இந்த சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டித் தருவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான முயற்சி எடுத்தேன். மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், இந்த தொகுதியின் எம்பி என்ற முறையில் இந்த சந்திப்பில் மேம்பாலம் அமைவதற்கு, ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கிரி அவர்களிடம் நேரடியாக சென்று இந்த துவரிமான் – கீழ மாத்தூர் சந்திப்பில் அவசியம் எங்களுக்கு ஒரு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எங்களிடம் வாக்குறுதி அளித்தார்.

விரைவில் இந்த பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்வேன் என்று அவர்கள் சொன்னதன் அடிப்படையில் தொடர்ந்து நாங்களும் முயற்சி செய்து கொண்டே இருந்தோம். அதனுடைய பின்னணியில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி கடிதம் அனுப்பினார். என்பதை மக்களிடையே அன்றே தெரிவித்தோம். அதற்குப் பிறகு பணியானது துவங்கி இந்த பகுதியின் உடைய இரண்டு பக்கமும் இருக்கக் கூடிய நிலம் கையகப்படுத்த முயற்சித்து அந்த நிலத்திற்கான மதிப்பீட்டினை கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடைய வருவாய் துறைக்கு இருந்தது. இந்த நேரத்தில் மதுரையினுடைய முன்னாள் வருவாய்த்துறை அலுவலர் சக்திவேல் அவர்களை பாராட்ட வேண்டும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் அமைச்சர் ஒப்புதல் கொடுத்த பின்னர் தொடர்ந்து அவரை வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த இடத்திற்கான மதிப்பிட்டு சான்றிதழை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு வழங்கி நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து தற்போது 46 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைய உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியினை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொழுது அந்த பாலப் பணிகளை துவக்கி வைப்பதற்காக இங்கே வந்துள்ளோம். மிக விரைவாக இந்த பாலத்தை திட்டமிடப்பட்டுள்ள 36 மாதத்திற்குள் முடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல தரமான பாலமாகவும், பகுதி மக்களின் உயிர்காக்குற பாலமாகவும் இந்த பாலம் அமையும் என்ற மகிழ்ச்சியை மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன்.

‌‌‌

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!