மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஐயப்ப நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் முழு திரு உருவச்சிலைக்கு பாலாபிஷேகம் செய்து நோட் புத்தகங்கள் வழங்கி அவரது பிறந்தநாளை நாடார் உறவின் முறை சங்கத்தினர், நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கொண்டாடினர். நாட்டாமைக்காரர்கள் பால்பாண்டி ,ராம் பிரபு ,காமாட்சி பிரபு தலைவர் மனோகரன் பாலகிருஷ்ணன், செயலாளர் வேல்முருகன்,, பொருளாளர் சின்னு காளை, துணை தலைவர் கந்தசாமி துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக குருவித்துறை ஐயப்ப நாயக்கன்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர் அதனைத் தொடர்ந்து மன்னாடிமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

You must be logged in to post a comment.