மதுரை மாவட்டம்உசிலம்பட்டி வண்ணாரப் பேட்டை நாடார் புது தெருவில் காமராஜர் பிறந்தநாள் விழா உசிலம்பட்டி நட்டாத்தி நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியமான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி பரிபாலன சபை சங்க தலைவர் பி. பிரசாத் கண்ணன் ஏற்பாட்டில் அன்னதானம் – இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பரிபாலான சபை செயலாளர் எஸ். எம். எஸ். ஆர் நடராஜன் தலைமையில் அன்னதான நிகழ்ச்சியை அ.இ. அதிமுக நகரத் தலைவர் பூமா ராஜா மாநில நிர்வாகி துரை தனராஜ் வார்டு உறுப்பினர் வி. பிரகதீஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் வருகை புரிந்த பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உசிலம்பட்டி சத்ரிய குல நட்டாத்தி நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் திமுக ஒன்றிய தலைவர் அஜித் பாண்டி அ.இ. பார்வர்டு பிளாக் பொறுப்பாளர் ரெட் காசி உசிலை நகர பாஜக தலைவர் சௌந்தரபாண்டியன் வடக்கு மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி ஜெ. ரங்கராஜா சமுதாய உறவினர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.