மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, புன்னூர் அய்யன், பாப்பம்மாள் கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்

ஆர்.பி.உதயக்குமார்.,
நான்கு ஆண்டுகளாக மக்களின் குறை தீர்க்காமல் தூங்கி கொண்டிருந்த திமுக அரசு தற்போது மக்களிடத்தில் மிக பெரிய வெறுப்பு, கோபத்தை சம்பாதித்து, தோல்வியடைந்த காரணத்தால்., ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் உங்களோடு, முதல்வர், உங்கள் வீட்டிலே முதல்வர் என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு இப்போது உங்களோடு ஸ்டாலின் என்று சொன்னால் போனி ஆகுமா என பார்க்கிறார்கள்.,
நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்திருக்கின்றோம், அந்த அதிகாரிகள் அரசு திட்டங்களை துறை வாரியாக வெளியிடுவார்கள் என சொல்லியுள்ளனர்.,
இந்த அரசு நம்பிக்கை இழந்த காரணத்தினால், நன்மை மதிப்பை பெற்றிருக்கும் அதிகாரிகளை முகமூடியாக வைத்துக் கொண்டு இன்று மக்களிடத்தில் பிரச்சனையை திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்களோ என்கிற சந்தேகம் மக்களிடத்தில் எழுந்திருக்கிறது.,
இன்று நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளின் முகமூடியை பயன்படுத்தி மீண்டும் பொய்யான பிரச்சாரங்களை செய்ய இந்த அரசு முயற்சிக்கிறதோ, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு வழிவகைகளை தேடுகிறார்களே தவிர பிரச்சினைகளை தீர்வு காண இந்த அரசு எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.,
ஏற்கனவே மக்கள் தொடர்பு முகாம் எனும் மக்கள் குறை தீர்க்கும் மாதம் மாதம் நடைபெற்று வருகிறது, அதே போல ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும், வட்டாச்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.,
ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற நடைமுறைகள் காலாவதியாகிவிட்டதா, ஒத்தி வைக்கப்பட்டதா, முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் என்ன ஆகிவிட்டது.,
அதிமுக ஆட்சியில் ஒரு வட்டாச்சியர் அலுவலகத்தை முகாம் நடத்தும் இடத்திற்கு கொண்டு சென்று தலைமை செயலகம் வரை கொண்டு சென்றோம்., இப்போது அவசர கோலத்தை அள்ளி தெளித்தது போல எந்த கட்டமைப்புமே உருவாக்காமல் ஏற்கனவே நான்கு ஆண்டுகளில் காலி பணியிடங்களை நிரப்பவில்லை, இந்நிலையில் தன்னார்வ குழுவினர் 1 லட்சம் பேர் ஈடுபடுத்த படுவார்கள் என்றால் துண்டு பிரசுரம் கொடுப்பது போல தான் மனுக்களை கொடுத்து பெற வாய்ப்பு உள்ளது.,
உரிய வழிவகைகளை கண்டறியாமல் வெற்று விளம்பரத்திற்காக தான் இது இருக்கிறது., நான்கு ஆண்டுகளில் செய்ய முடியாததை 4 மாதங்களில் செய்து விட போகிறார்களா, மின்சார கட்டணத்தை குறைக்கப்படுமா, நீட் தேர்வை ரத்து செய்ய மனு கொடுத்தால் ரத்து செய்வீர்களா, சட்டம் ஒழுங்கு சீர் செய்ய மனு கொடுத்தால் சீர் செய்வீர்களா, விசாரணைக்கு செல்பவர்களை பரலோகம் செல்ல வைப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க மனு அளித்தால் உங்கள் ஸ்டாலின், என்னமோ ஒன்று விளம்பரம் செய்வதில் மட்டும் குறைவில்லை.,
அனைத்து இடங்களிலும் 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என பச்சை பொய் பேசுவதால் மக்கள். கடுமையான கோபமாகி bye bye ஸ்டாலின் welcome எடப்பாடியார் என்பது தான் இந்த தமிழகத்தில் எட்டு திசையிலும் ஒளிக்கும் உரிமை குரலாக, உயிர் சொல்லாக இருக்கிறது., என பேட்டியளித்தார்.,
You must be logged in to post a comment.