மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் எம்.வி. எம் மருது பாண்டியன், பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். பேச்சு கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா பரிசுகள் வழங்கினார் இதில் பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.