கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் பள்ளி நிர்வாகங்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் சோழவந்தான் நாடார் உறவின்முறை சார்பாக அவரது முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தலைவர் ஞானசேகரன் செயலாளர் மாரியப்பன் பொருளாளர் ஜெயபாண்டி துணைத் தலைவர் சண்முக பாண்டியராஜா துணை செயலாளர் பாலாஜி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்இந்து நாடார் உறவின்முறை சார்பாக தலைவர் தங்கப்பாண்டி தலைமையில் செயலாளர் ராஜகுரு பொருளாளர் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காமராஜர் பள்ளியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சோழவந்தான் நகர செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி வட்டாரத் தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார் மாவட்ட மகளிர் அணி தலைவி செல்லப்பா சரவணன் மாலை அணிவித்தார். பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி வரவேற்றார். இதில் வாடிப்பட்டி குருசாமி, இளைஞரணி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிவண்ணன், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் சோணைமுத்து, இளவரசன் ,பாண்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் கல்லணை மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சோழவந்தானில் உள்ள அவரது முழு திருவுருவத்திற்கு சோழவந்தான் பேரூர் நிர்வாகி விஜய் சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் பாலா இளவரசன் சுரேஷ், பாரதி, தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவரது முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சோழவந்தான் பேரூர் செயலாளர் குமணன் தலைமை வகித்தார். டாஸ்மாக் தர்மா முன்னில வகித்தார். தொழிற்சங்கம் கார்த்தி ,குருநாதன், நவீன், முத்து ,ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், வணிகரணி சப்பானி உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.