மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புனிதன் காமராஜ் நற்பணி மன்றம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கி இனிப்புகள் வழங்கினர்.
புனிதன் காமராஜ் நற்பணி மன்றம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணக்குமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உசிலை எம். மகேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் எல் விஜய காந்தன் நகரத் தலைவர் காந்தி சரவணன் முன்னிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி. தினகரன் நகரச் செயலாளர் சரவணபவன் விஸ்வகர்மா நலவாரிய தலைவர் பிச்சை ஆசாரி டி.என்.டி.யூ.சி கிளைத் தலைவர் சரவணகுமார் பொருளாளர் மகேஷ் மண்டல தலைவர் பிரேம் ஆனந்த் நிர்வாகத் தலைவர் செந்தில்குமார் நிர்வாக செயலாளர் யோக்கியன் துணைத் தலைவர் தமிழ்மாறன் மற்றும் வேல்முருகன் தியாகி பெரியசாமி தொண்டர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உசிலம்பட்டி நகராட்சி அருகே உள்ள சத்திரப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் பேனா பென்சில் மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்கினர். மேலும் உசிலம்பட்டி பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜர் பிறந்த நாளை கொண்டாடினர்.
You must be logged in to post a comment.