மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று ஆறாம் நாள் மண்டபடியாக வி. கீரை கண்ணன் குடும்பத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் சமுதாய கூடத்தில் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டான், முள்ளிப்பள்ளம் அகமுடையார் சங்க தலைவர் கிட்டு என்ற கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில் முள்ளிப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் உண்டு மகிழ்ந்தனர்.

You must be logged in to post a comment.