மதுரை நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டிகள் மதுரை மாவட்டம்

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 45க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். பின்னர் பரிசளிப்பு பரிசளிப்பு விழா மதியம் பள்ளி அருகிலுள்ள குருசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் மற்றும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்று பேசினார்கள். எம் எஸ் ஆர் நடராஜன்; தலைமை தாங்கினார். மதுரை பாலகுரு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன் செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மகேந்திரன் ஆதிசேஷன் உசிலம்பட்டி அரசு வழக்கறிஞர் ராஜசேகர் மதுரை வழக்கறிஞர் நாகராஜ் உசிலம்பட்டி அதிமுக நகர செயலாளர் பூமா ராஜா வழக்கறிஞர் லட்சுமணன்,, பிரசாத் கண்ணன் வடக்கம்பட்டி ராசி பட்டாசு கடை துரைப்பாண்டி கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழும் மெடல் வழங்கப்பட்டது. பொன் ரமேஷ் ஆசிரியர் நன்றியுரை கூறினார்.போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பங்கேற்றதற்கான சான்றிதழ்களும் மெடல்களும் வழங்கப்பட்டது அழைத்து வந்த பொறுப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது;
You must be logged in to post a comment.