மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது சோழவந்தான் பகுதிகளில் கடந்த வாரம் தெரு நாய் கடித்ததில் 10 பேர் காயம் அடைந்து அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியிருந்தனர் இந்த நிலையில் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் இளங்காளியம்மன் கோவில் பகுதியில் நேற்று இரவு தெரு நாய் கடித்ததில் மூன்று ஆடுகள் இறந்தன இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் குறிப்பாக தெருக்களில் குழந்தைகள் விளையாடும் நேரங்களில் தெரு நாய்கள் இருப்பதால் எந்த நேரமும் குழந்தைகளுக்கு ஆபத்து நேரும் என அச்சமடைகின்றனர் ஆகையால் முள்ளி பள்ளம் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.