மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர் எம் எஸ் காலனி நுழைவாயில் அருகில் உள்ள தனியார் மஹாலில் கட்டிட வேலை பணிகளுக்காக சாலையின் நடுவே கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் சோழவந்தான் தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்த பொழுது சாலையின் நடுவில் கொட்டப்பட்டிருந்த மணல் மீது இருசக்கர வாகனம் ஏரி சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்த்ததில் சம்பவ இடத்தில் அய்யனார் உயிரிழந்தார் உயிரிழந்த அய்யனாருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி உள்ளது சம்பவம் நடந்தவுடன் சோழவந்தான் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்திய போது அங்கிருந்த தனியார் திருமண மஹாலின் மேலாளர் சாலையில் கொட்டப்பட்டு இருந்த மணல் குவியலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை உயிர் இழப்பிற்கு நாங்கள் காரணம் இல்லை என கூறியதுடன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது இந்த நிலையில் காவல்துறையினரின் விசாரணையில் சாலையின் நடுவில் கொட்டப்பட்டு இருந்த மணல் குவியல்கள் சம்பந்தப்பட்ட தனியார் மஹால் உரிமையாளர் மூலம் சாலையில் கொட்டப்பட்டதாகவும் திருமண மஹாலின் கட்டடப் பணிகளுக்கு கொட்டப்பட்டிருந்த மணல் குவியல்களே விபத்திற்கு காரணம் எனவும் தெரிவதாக கூறப்படுகிறது
29 வயதான அப்பாவி இளைஞர் அய்யனாரின் திடீர் மரணம் அந்த குடும்பத்தினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது மேலும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் தற்போது அனாதைகளாக மாறி உள்ள சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட விபத்திற்கு காரணமான தனியார் திருமண மஹாலிலன் உரிமையாளர்களோ மற்றும் அரசு நிர்வாகமோ இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வருகிறது ஆகையால் சம்பந்தப்பட்ட ஆர் எம் எஸ் காலனி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகளுக்கு காரணமான தனியார் திருமண மஹாலின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் மேலும் திருமண உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை திருமண மஹால் உரிமையாளர்களிட மிருந்து வசூல் செய்து தர வேண்டும் உயிரிழந்தவரின் மனைவிக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என அவரின் குடும்பத்தினர் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் சம்பந்தப்பட்ட தனியார் திருமண மஹால் இருக்கும் ஆர் எம் எஸ் காலனி நுழைவுப் பகுதிகளில் தொடர்ச்சியாக விபத்துகள் நடப்பதால் திருமண மஹாலின் முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அரசு இடங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட திருமண மஹால் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

You must be logged in to post a comment.