சமயநல்லூரில்முகத்தை சிதைத்துகட்டிட தொழிலாளிகொடூர கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு j.(எ)வினோத்குமார்(வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா. (23) என்ற மனைவியும்,2.வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமயநல்லூர் வைகை ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தனது நண்பர் பாண்டியனுடன் அந்த பகுதியில் உள்ள சினிமா. தியேட்டர் முன்பு நடந்து வந்த போது திடீரென்று ஒரு காரில் அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வினோத்குமாரை வழி மறித்து சரமாரி வெட்டி முகத்தை சிதைத்து படுகொலை செய்தனர். அப்போது கொலையாளிகளை தடுக்க முயன்ற பாண்டியை கையில் வெட்டினர். பின் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் . காரிவ் ஏறி தப்பி சென்றனர். இது குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் பலியான வினோத்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த 2022.ஆம் ஆண்டு கோவில்பாப்பாகுடி பகுதியில் நடந்த ஆட்டோ ரவி கொலைக்கு பலிக்கு பலியாக கடந்த 2024.ம் ஆண்டு ஜெயசூர்யாஎன்பவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அதனால் பழிவாங்கும் விதமாக இந்த கொலையும் நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்அரவிந்தன், சமயநல்லூர் துணை போலீஸ்சூப்பரண்டு ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டனர். இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து காரில் தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!