சோழவந்தானில் சாலையின் நடுவே கொட்டிய மணலால் அப்பாவி இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆர் எம் எஸ் காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி வைத்திருந்த மணலில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து சம்பவ இடத்தில் பலியான பரிதாபம் அப்பாவி இளைஞரின்மரணத்தால் அனாதையான குடும்பம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் வயது 29 திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவர் நேற்று இரவு சோழவந்தான் சென்று விட்டு தனது சொந்த ஊரான தச்சம்பத்திற்கு திரும்பும் வழியில் ஆர் எம் எஸ் காலனி அருகில் தனியார் மஹால் முன்பு கட்டட வேலைகளுக்காக சாலையின் நடுவே மணலை கொட்டி வைத்துள்ளதாக தெரிகிறது சாலையில் இருந்த மணல் தெரியாமல் வாகனத்தில் சென்றவர் மணல் குவியல் மீது மோதி தவறி விழுந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் அருகில் இருந்தவர்கள் அய்யனார் உடலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்து அங்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இறந்து கிடந்த அய்யனாரின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது சோழவந்தான் ஆர் எம் எஸ் காலனி பகுதியில் சாலை நடுவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது சாலையின் நடுவில் கட்டட வேலைக்காக மணலை கொட்டி வைத்ததில் விபத்து நடந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று இரவு நடந்த விபத்து காரணமாக அப்பாவி இளைஞர் உயிரிழந்த பின்பும் இன்று காலை வரை நடுரோட்டில் கொட்டி வைத்து இருந்த மணல் குவியலை அல்லாமல் இருந்தது வேதனையிலும் வேதனையாக உள்ளது ஆகையால் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் சாலையில் மணலை கொட்டுவது தடுக்க வேண்டும் மேலும் நேற்று இரவு உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!