மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஆங்காங்கே பள்ளங்களை தோண்டி சரிவர மூடாத நிலை ஏற்பட்டுள்ளது
அலங்காநல்லூர் முக்கிய பகுதிகளான பத்திரப்பதிவு அலுவலகம் யூனியன் அலுவலகம் அரசு மருத்துவமனை பேரூராட்சி அலுவலகம் தீயணைப்பு அலுவலகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனியார் பள்ளி ஆகியவை உள்ள முக்கிய பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி அதிகாரிகள் ஆங்காங்கே பள்ளங்களை தோண்டி போட்டுள்ளனர்
இந்த நிலையில் பள்ளங்களை சரிவர மூடாததாலும் குடிநீர் குழாய்களை பதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பள்ளங்களில் குடிநீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ளது
இதனால் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்
மேலும் இந்த பகுதியில் உள்ள அரசு அலுவலகம் அரசு மருத்துவமனைக்கும் வரக்கூடிய பொதுமக்களுக்கு பள்ளங்களில் விழுந்து காயங்கள் ஏற்படுவதுடன் இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது
இன்று காலை 11 மணியளவில் அலங்காநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கேட்டு கடை செல்லும் பாதை வழியாக சென்ற கார் குடிநீர் குழாய் மதிப்பதற்காக தோன்டிய பள்ளத்தில் விழுந்தது காரில் வந்தவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர்
காரில் கயிறை கட்டி பள்ளத்தில் இருந்து மேலே இழுக்க முயற்சி செய்தனர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரை மீட்க முடியாததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் குடிநீரும் பள்ளங்களிலிருந்து வீணாக சாலைகளில் சென்று வருகிறது இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் ஒரு வாரத்திற்கும்
மேலாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர் ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோன்டிய பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.