சோழவந்தான் அருகே தச்சமுத்து விவேகானந்தா கல்லூரி இடையில் மரம் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பு
மதுரை சோழவந்தான் அருகே தச்சம்பத்து விவேகானந்தா கல்லூரி இடையில் புங்கமரம் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மரத்தை அகற்ற அதிகாரிகள் யாரும வராத நிலையில் பொதுமக்களே மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்
தச்சம்பத்து அருகே இரவு 7 மணி அளவில் பழமையான புங்க மரம் சாலையின் நடுவில் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் மரம் விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலை நடுவே நின்று விட்டது மேலும் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் கார்கள் என சாலையில் அரை கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்றன அதிகாரிகளுக்கு தொடர்ந்து போன் பண்ணியவாறு இருந்தனர் ஆனால் எட்டு மணி ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்களே மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு டாட்டா ஏசி காரில் கயிறு கட்டி மற்றொருபுறம் மரத்தில் கயிறு கட்டி பொதுமக்களே மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர் பொதுமக்களின் இந்த செயல் அங்கிருந்தவர்களின் பாராட்டுக்களை பெற்றது
You must be logged in to post a comment.