மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் சுமார் 3009க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு பயிலும் மாணவர்கள் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்களை சந்தித்து விட்டு அன்று இரவே கல்லூரிக்கு திரும்புவது வழக்கம் இந்த நிலையில் கல்லூரியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் வாரந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர் இந்த நிலையில் இவர்கள் கல்லூரி பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி திருமங்கலம் மதுரை செக்கானூரணி சோழவந்தான் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது ஆனால் இவர்களுக்காண பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 20க்கும் மேற்பட்ட ஆட்டோகளில் ஆட்டோவிற்கு 30 முதல் 50 பேர் என ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு சென்று வருகின்றனர் இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு தொடர்ச்சியாக கோரிக்கை மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமாவது கூடுதல் பேருந்துகளை கல்லூரியிலிருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் வாரந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த சம்பவத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர் அரசு போக்குவரத்து கழகம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விவேகானந்த கல்லூரியில் இருந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.