சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களை
காவலர்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் செய்தி சேனலிலும் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில்
நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்த நபரை காவலர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் தந்தைக்காக மகனை அழைத்து வந்த நிலையில் எங்க அப்பாவுக்காக எதற்கு என்னை அழைத்து வந்தீர்கள் என்று விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர் கேட்பதும் அவரிடம் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் பின்பு அவரை காவலர்கள் தாக்குவதுமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் தொடர்ச்சியாக காவல் நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது நேற்று முன்தினம் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்த நபர் யார் எதற்காக அழைத்துவரப்பட்டார் என்ன காரணத்திற்காக காவல்துறை அவரை தாக்கியது உள்ளிட்ட விவரங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க வேண்டும் காவலர்கள் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.