மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் ஒன்பதாம் தேதி தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் தலைமையில் மற்றும் தொழிற்சங்கம், தொழிலாளர்கள் சார்பில் அகில இந்திய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கம் கந்தவேலு தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளர் பொன்ராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அ.வேல்பாண்டி மறியலை விளக்கி பேசினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் நிறைவுரையாற்றினார். மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், விவசாய விலைப் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்திடவும், 100 நாள் வேலையினை 200 நாட்களாக உயிர்த்திடவும் 600 ரூபாய் கூலி வழங்க கோரியும், தொழிலாளர் விரோத சட்ட மசோதா திரும்ப பெற கோரியும் அகில இந்திய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக நடைபெறும் மறியலுக்கு பொதுமக்கள் அதிகளவு ஆதரவு தர வேண்டும் என்று கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது. விவசாயிகள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்கள் ஆதரவுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.