மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் மற்றும் பாலஸ்தீன் நாடுகள் பாதிப்படைந்ததை முன்னிட்டும். இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் ஈரான் நாடுகள் மீது தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் அகில இந்திய செயல் தலைவர் எஸ். நம்பிராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் கே. தவமணி செயலாளர் வி. முருகன் முன்னிலையில் ஒன்றிய தலைவர் நாகராஜ் ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி மாவட்ட பொருளாளர் பழனியம்மாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உசிலம்பட்டியில் பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.