மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தினசரி சந்தையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய எம் எல் ஏ அலுவலகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தினசரி சந்தை பகுதியில் பழைய சட்டமன்ற தொகுதி அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் உசிலம்பட்டி எம் எல் ஏ அய்யப்பன் புதிய கட்டிடம் கட்டித்தர தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். பி அய்யப்பன் எம் எல் ஏ வின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு புதிய எம் எல் ஏ அலுவலகம் கட்ட ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், அத்துடன் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.21 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு, ரூ70 லட்சம் மதிப்பில் மூலம் அதற்கான கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
உசிலம்பட்டி எம் எல் ஏ பி. அய்யப்பன் பங்கேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். உசிலம்பட்டி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரியா, உதவி பொறியாளர் ராஜ்பிரதாப், அ தி மு க ஓ.பி.எஸ் அணி மாவட்ட நிர்வாகி பிரபு, நகர செயலாளர் சசி, நகர துணை செயலாளர் அழகுமாரி, ஒன்றிய செயலாளர்கள் மல்லப்புரம் பெருமாள், ஜான்சன், அய்யர், போத்திராஜ், கார்த்திகேயன், பிரேம்குமார், ஆவின் சவுந்திரபாண்டி, ஜெயக்குமார், வீரா, எபி,மனோஜ், ராகுல், கௌதம் உள்ளிட்டகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
You must be logged in to post a comment.