விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது குறித்து விஜய்-இடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என ஆர் பி உதயகுமார் பதில்

oppo_0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில் வழிபாடு செய்த பின் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கினார்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும், எங்கள் குறித்து எங்களிடம் கேட்க வேண்டும் மாத்தி மாத்தி கேட்டால் எப்படி பதில் சொல்வது.,

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் துவங்கும் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இசெட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது., இதற்கு முன்பே கோரிக்கையாக வைத்தோம், அவர் வீட்டிற்கு பல முறை வெடி குண்டு மிரட்டல் விடப்பட்டது, பலமுறை உயிருக்கு அச்சுறுத்தல் வந்தது., அவரை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை, இந்த அறிவிப்பை 8 கோடி தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.,

எடப்பாடி பழனிச்சாமி தெளிவான தேர்தல் வியூகம் அமைத்துள்ளார்., திமுக ஆட்சி வேண்டாம் என சொல்பவர்கள் 80% தொடர வேண்டும் என சொல்பவர்கள் 20% அப்போது தகுதியை இழந்த ஒரு அரசாக திமுக அரசு உள்ளது.,

ஆனால் 80% பேர் தனித்தனியாக குரல் எழுப்புவதால் ஸ்டாலின் மஞ்சள் குழிக்கிறார், குளர் காய்கிறார்., இந்த 80 சதவீதம் பேர் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு குரல் எழுப்பும் போது மக்கள் எண்ணங்களும் நிறைவேறும், எதிர்ப்பு குரல் எழுப்பும் அனைத்து கட்சிகளின் எண்ணங்களும் நிறைவேறும்.,

அதனால் தான் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக தெளிவான தேர்தல் வியூகம் அமைத்துள்ளார்.,

இந்த வாக்குகள் சிதறுவதால் இன்று திமுகவினர் இயலாமையிலிருந்து, விளம்பரத்தை நம்பி இருக்கிறார்கள்., வாக்காளர்கள் 30 சதவீதம் திமுகவில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள் 30 சதவீதம் சேர்த்தா 2021 ல் ஆட்சிக்கு வந்தார்கள் அப்போது திமுக பலவீனம் ஆகிவிட்டது., ஆட்சி நம்பிக்கை இழந்து விட்டது.,

மக்கள் நம்பிக்கை இழந்த காரணத்தினால் அவரே தெருவில் இறங்கி ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் நீங்கள் எத்தனை பேர் சேர்த்தீர்கள், நீங்கள் எத்தனை பேர் சேர்த்தீர்கள் என கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.,

மதுரையில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்த போவதாக செய்தி வருகிறது., உங்கள் மாவட்டத்தில், உங்கள் வீட்டில், உங்கள் ஸ்டாலின் என சொல்கிறார்கள் சொல்வதோடு சரி அவ்வளவு தான், குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல தான் திமுகவினர் சொல்வது சொன்னதோடு போச்சு.,

எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் மாபெரும் ஒரு வரலாற்றை உருவாக்கும் என கூறினார்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!