உசிலம்பட்டியில் மறைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க நாள் பேரணி

உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வணக்க பேரணி நடைபெற்றது இந்தப் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வீரவணக்க பேரணிக்கு மாநில துணைத்தலைவர் ஆர் உதயகுமார் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது . இந்த வீரவணக்க பேரணியில் தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட அவைத் தலைவர் தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் இந்தப் பேரணியில் விவசாய பெருமக்கள் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகளும் மகளிர் விவசாய அணியினர் கலந்து கொண்டனர் . இந்த பேரணியில் 58 கிராம் பாசன சங்கத்தின் தலைவர் சின்ன யோசனை செயலாளர் எஸ். பச்சைதுண்டு பெருமாள் மற்றும் வழக்கறிஞர் போஸ் சட்ட உரிமைகள் இயக்க தலைவர் அண்ணாதுரை மாவட்டச் செயலாளர்கள் காட்டுராஜா காராமணி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரன் தொழில் நுட்ப அணி செயலாளர்கள் பூசாரி செல்லையா. சசிகுமார் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் ஒன்றிய செயலாளர்கள் சின்னன் முருகன் ஜெயச்சந்திரன் மீரான் மைதீன் அய்யனார் பழனியப்பன் மின்னல் மலைச்சாமி மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்தப் விவசாயிகள் பேரணி உசிலம்பட்டி மதுரை ரோடு பி ஆர் சி பணிமனையில் இருந்து புறப்பட்டு தேனி ரோட்டில் முருகன் கோவில் முன்பாக உழவர் போராளி படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!