நாமும் முதல்வரிடம் ஸாரி கேட்போம்…. அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு….-முன்னாள் அமைச்சர் ஆர்பி

 உயிர் திரும்பி வருமா? முதல்வர் ஸாரி கேட்கிறார், நாமும் ஸாரி கேட்க வேண்டும் ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு உங்களுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை என ஸாரி சொல்ல வேண்டும் – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு.,

oppo_0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல திருமாணிக்கம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கலந்து கொண்டு அரியமாணிக்கம் அம்மன் கோவிலில் வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.,

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துவது விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் தான் விசாரணை செய்ய வேண்டும்.,

ஆனால் அஜித்குமாரை விசாரித்தது தனிப்படை, சிறப்புபடையினர்., அதே போன்று ஒவ்வொரு நாளும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறதே அதற்கெல்லாம் இதே போன்று தனிப்படை அமைத்து விசாரிக்கின்றீர்களா.,

ஏன் அஜித்குமாரை மட்டும், இன்று 25 வது லாக் அப் மரணம், விசாரணைக்கு சென்றவர் இன்று உயிரோடு வரவில்லை., இதை சாதாரணமாக எடுத்து செல்ல, கடந்து செல்ல முடியாது.,

எதையும் நியாய படுத்தி வருகிறார்கள், நடந்தது நடந்து போய்விட்டது ஸாரி என சொல்கிறார், ஸாரி சொன்னால் சரியாக போய்விடுமா, போன உயிர் எப்படி திரும்பி வரும், கர்ப்பு போனது திரும்பி வருமா.,

இதை எப்படி கையாள வேண்டும் என சட்டத்தில் இடமுள்ளது., இதெல்லாம் எங்கே போனது, இது என்ன சர்வாதிகாரியாக, முசோலினியா ஸ்டாலின்.,

இதுவே ஸ்டாலின் வீட்டில் நடந்திருந்தால் நீங்கள் பொறுத்திருப்பீர்களா, ஏழை எளிய சாமானிய மக்கள் என்றால் ஒரு நீதி, உங்களுக்கு ஒரு நீதியா, சட்டத்தின் முன் எல்லோரும் சமம் தானே.,

எங்கே போனது சட்டம், தமிழ்நாட்டில் சட்டத்தின் கீழ் ஆட்சி நடக்கிறதா, கொலைகார ஆட்சி நடக்கிறதா., காவல் நிலையமா, கொலைகார நிலையமா., விசாரணைக்கு போக வேண்டுமென்றால் அஞ்ச வேண்டி இருக்கிறது.,

நீதி கிடைக்கும் வரை அதிமுக அஜித்குமார் குடும்பத்திற்கு உறுதுணையாக நிற்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.,

மனித உரிமை மீறல், பட்ட பகலில் போட்டு அடித்துள்ளார்கள், யார் உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது., விசாரணை செய்யுங்கள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துங்கள், இப்போது என்ன திருடு போனது என எதுமே தெரியவில்லை.,

இளைஞர்களே இன்று இருக்கும் ஆட்சியின் கொடுமை நன்றாக தெரியும், தெரிந்தும் மன்னித்து விடாதீர்கள்., முதல்வர் ஸாரி கேட்கிறார், நாமும் ஸாரி கேட்க வேண்டும் ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு உங்களுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை, உங்களால் உயிர் பலியை தடுக்க முடியவில்லை, பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியவில்லை, சட்ட ஒழுங்கு சீர்கேட்டை தடுத்து நிறுத்த முடியவில்லை., எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சிக்கு வந்து இதற்கு தீர்வு காண்பார் என சொல்ல வேண்டும்., என பேசினார்.,

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!