மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2023 ஆண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த அச்சம்பட்டியைச் சேர்ந்த மணி மகன் விஜய்(26) என்பவரை அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வாடிப்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி செல்லையா குற்றவாளி விஜய்க்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

You must be logged in to post a comment.