மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்அருகே அழகாபுரி ஊராட்சியில் கழிவுநீர் தேங்குவத அலங்காநல்லூர் அருகே அழகாபுரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி தெருக்களில் ஆறாக ஓடுவதாகவும் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலப்பதால் குடிநீரை குடிக்கும் பொதுமக்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படுவதாகவும் இது குறித்து அழகாபுரி ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
அழகாபுரி ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் முறையாக கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளில் முன்னே கழிவுநீர் தேங்கி ஆறாக ஓடுகிறது மேலும் தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களில் அருகில் கழிவு நீர் கலந்து செல்வதால் குடிநீர் பைப்புகளில் கழிவு நீர் கலந்து அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு தொடர்ச்சியாக மருத்துவமனை செல்லக்கூடிய அவல நிலை ஏற்படுகிறது இது குறித்து அழகாபுரி ஊராட்சி செயலாளரிடம் மனுக்கள் மூலமும் நேரிலும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அழகாபுரி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.